அகமதாபாத்
நகரின் முக்கிய ஜவுளி சந்தைகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் கூடிப்பேசிய பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைப்புகள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஜவுளி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள எவருக்கும் 5 சதவீத வரி ஏற்புடையதல்ல. எங்களது எதிர்ப்பை பதிவு செய்ய அனைத்து சந்தைகளும் நாளையிலிருந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவர் என்ற அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரத்தைச் சேர்ந்த ஜவுளி வர்த்தகர்கள் ஏற்கனவே கடந்த ஒருவாரமாக காலவரையறையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று ஆயிரக்கணக்கான வர்த்தகர்கள் பெரியதொரு பேரணியையும் நடத்தினர்.
இதனிடையே மத்திய அமைச்சர் ரூபாலா போராட்டத்தை விடுத்து மத்திய அரசிடம் பேசி தீர்வு காணும்படிக் கூறினார். வர்த்தகத்திற்கு ஊக்கம் தரும் விதத்திலேயே ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டுள்ளது. யாரையும் துன்புறுத்த அல்ல. இப்புதிய வரி அமைப்பால் வர்த்தகர்கள் சில பிரச்சினைகளை சந்திக்கின்றனர். அரசிடம் பேசி இப்பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்றார் ரூபாலா.
ஜவுளி வர்த்த்கர்கள் தவிர்த்து பட்டம் செய்வோரும் 5 சதவீத வரியை எதிர்த்து பட்டம் விடும் போராட்டத்தை சபர்மதி நதிக்கரையோரம் நடத்தினர். இதற்கு முன்னர் பட்டம் தயாரிப்பில் வரி இடப்படவில்லை, பட்டம் தயாரிப்பில் ஈடுபடுவோரில் பெரும்பாலோர் வரி அமைப்பு பற்றி அறியக்கூடிய தன்மை இல்லாத படிப்பறிவற்றவர்கள். நாங்கள் அரசிடம் ஜிஎஸ்டியை திரும்பப் பெற கேட்போம். இல்லையென்றால் எங்கள் வியாபாரத்தை மூடிவிட்டு செல்வோம் என்றார் நஸ்ரூதின் எனும் பட்டம் உற்பத்தியாளர்.