கோவை மாநகரில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கலெக்டர் ஆய்வு

கோவை மாநகரில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
கோவை மாநகரில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கலெக்டர் ஆய்வு
Published on

கோவை,

கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களின் குடும்பத்தினர் அருகில் வசிப்போர், தொடர்பில் இருந்த நபர்கள் ஆகியோருக்கு தொடர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வசித்த பகுதி தனிமைப்படுத்தபடுகிறது.

அதன்படி கோவை மாவட்டத்தில் பல இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. அவற்றில் கோவை மாநகரப்பகுதிகளான தெலுங்குபாளையம், செல்வபுரம் ஹவுசிங்யூனிட், காந்திபார்க் தெலுங்குவீதி, அய்யப்பா நகர், செட்டிவீதி ஆகிய தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மாவட்ட கலெக்டர் ராஜாமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடல் நலம் குறித்து கேட்டார்

அப்போது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தொடர்ந்து கண்காணிப்பு வளையத்திற்குள் வைத்திருக்கவும், அப்பகுதி மக்களுக்கு தேவையான அத்தியாவசியப்பொருட்கள் தடையின்றி கிடைக்க மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். அதன் பின், அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் அவர்களின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com