நொய்யல்,
கோமாரி நோய் தடுப்பூசி முகாமிற்கு கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் டாக்டர் மணி மாறன், உதவி இயக்குனர் (நோய் புலனாய்வு பிரிவு) டாக்டர் முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் நொய்யல் கால்நடை மருத்துவமனை மருத்துவர் உஷா தலைமையிலான மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டு, கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட்டனர். முகாமில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது கால்நடைகளை கொண்டு வந்து பயன் பெற்றனர்.