கொரோனா ஊரடங்கு: இதுவரை 501 சிறப்பு ரெயில்கள் இயக்கம் - தெற்கு ரெயில்வே தகவல்

இதுவரை 501 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளதாகவும், அதில் சுமார் 7 லட்சம் தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்றுள்ளதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Published on

சென்னை,

கொரோனா ஊரடங்கால் புலம் பெயர் தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதற்காக ரெயில்வே நிர்வாகம் சார்பில் ஷர்மிக் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தெற்கு ரெயில்வே சார்பில் கடந்த மே மாதம் 1-ந்தேதி முதல் இதுவரையில் 501 ஷர்மிக் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்தில் இருந்து இயக்கப்பட்ட 259 ரெயில்கள் மூலம் 3 லட்சத்து 79 ஆயிரத்து 790 பேரும், கேரளாவில் இருந்து புறப்பட்ட 218 ரெயில்கள் மூலம் 3 லட்சத்து 4 ஆயிரத்து 957 பேரும், கர்நாடகாவில் இருந்து சென்ற 21 ரெயில்கள் மூலம் 28 ஆயிரத்து 300 பேரும், புதுச்சேரியில் இருந்து இயக்கப்பட்ட 3 ரெயில்கள் மூலம் 3 ஆயிரத்து 597 பேரும் என இதுவரையில் 7 லட்சத்து 16 ஆயிரத்து 644 பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று உள்ளனர்.

மேற்கண்ட தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com