தஞ்சை மாவட்டத்தில் 31 இடங்களில் கொரோனா பரிசோதனை மையம்; கலெக்டர் தகவல்

தஞ்சை மாவட்டத்தில் 31 இடங்களில் கொரோனா பரிசோதனை மையம் செயல்பட்டு வருகிறது என்று கலெக்டர் கோவிந்தராவ் கூறி உள்ளார்.
தஞ்சை மாவட்டத்தில் 31 இடங்களில் கொரோனா பரிசோதனை மையம்; கலெக்டர் தகவல்
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா நோய்த்தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா நோய்த்தொற்று உள்ளவர்களை கண்டறியும் வகையில், தஞ்சை மாவட்டத்தில் 31 இடங்களில் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

அணைக்கரை, நீலத்தநல்லூர், விளாங்குடி சோதனைச் சாவடிகள், பெரியார் மணியம்மை தனிமைப்படுத்தும் மையம், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ராசா மிராசுதார் மருத்துவமனை. கும்பகோணம், பட்டுக்கோட்டை, திருவையாறு, பாபநாசம், அதிராம்பட்டினம், பேராவூரணி அரசு மருத்துவமனைகள்.

தஞ்சை மாநகராட்சி, கும்பகோணம் நகராட்சி, பட்டுக்கோட்டை நகராட்சி, வல்லம், பட்டீஸ்வரம் நடமாடும் பரிசோதனை மையங்கள், முருக்கங்குடி, கோனுலம்பள்ளம், பட்டீஸ்வரம், கபிஸ்தலம், நடுக்காவேரி, மெலட்டூர், வல்லம், திருவோணம், தொண்டராம்பட்டு, மதுக்கூர், செருவாவிடுதி, அழகியநாயகபுரம், பாளையப்பட்டி, தாமரங்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய இடங்களில் கொரோனா பரிசோதனை செய்வதற்கான மாதிரிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

எனவே, தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால், தங்கள் பகுதிக்கு அருகில் இருக்கும் கொரோனா பரிசோதனை மையத்தில் மாதிரியை கொடுத்து பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. உடல்நலம் சரியில்லாதவர்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளை தொடர்புகொண்டு நடமாடும் பரிசோதனை மையங்கள் மூலம் பரிசோதனை செய்து கொள்ளலாம். கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com