இ-பாஸ் எடுக்காமல் வந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று: 2 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்

இ-பாஸ் எடுக்காமல் வந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் 2 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
Published on

சங்கரன்கோவில்,

சென்னை அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த 55 வயது பெண், தனது வீட்டின் அருகே வசித்து வரும் போலீஸ்காரர் ஒருவருடன் கடந்த 15-ந் தேதி அவரது சொந்த ஊரான சங்கரன்கோவிலுக்கு காரில் வந்தார். தென்காசி மாவட்ட எல்லையான வேலாயுதபுரம் சோதனை சாவடியில் வந்தபோது போலீஸ்காரர் கார் என்பதால் சோதனை செய்யாமல் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நகராட்சி சுகாதார பணியாளர்கள் மூலம் அவர் வந்த விவரம் அறிந்ததும் உடனே அவரது ரத்தமாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவர் வசித்த உச்சினி மாகாளியம்மன் தெருவில் சுகாதாரத்துறையின் மூலம் தடுப்புகள் வைக்கப்பட்டு தடை ஏற்படுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து விசாரணையில் கொரோனா தொற்று உறுதியான அந்த பெண் இ-பாஸ் எடுக்காமல் வந்ததால், அன்று வேலாயுதபுரம் சோதனை சாவடியில் பணியில் இருந்த 2 போலீசார் பாளையங்கோட்டை ஆயுதப்படை பணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com