தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 1,458 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 1,458 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 1,458 பேருக்கு கொரோனா தொற்று
Published on

சென்னை,

சீனாவில் உருவெடுத்த ஆட்கொல்லியான கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கொரோனா வைரசின் ஆக்டோபஸ் கரங்களுக்கு இந்தியாவும் தப்பவில்லை. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 7-ந்தேதி,
கொரோனா வைரசின் முதல் பாதிப்பு தொடங்கியது. இது ஏப்ரல் 1-ந்தேதியன்று 234 பேருக்கு என்ற நிலையை அடைந்தது. இந்த எண்ணிக்கை, மே 1-ந்தேதி 2 ஆயிரத்து 526 என்ற நிலை ஏற்பட்டது. இப்படி படிப்படியாக கொரோனா வைரசின் தாக்கம் ஊடுருவி வரலாறு காணாத பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி,

தமிழகத்தில் 1,423 பேர், பிறமாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த 35 பேர் என 1,458 பேருக்கு இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை 28,694-ல் இருந்து 30,152 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை 18,889 ஆண்கள், 11,446 பெண்கள் 17 திருநங்கைகளுக்கு கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.


சென்னையில் மேலும் 1,146 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 4-ம் நாளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது.

செங்கல்பட்டில் 95 பேர், திருவள்ளூரில் 80 பேர், காஞ்சிபுரத்தில் 16 பேருக்கு ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 19,835லிருந்து 20,993 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் இதுவரை 197 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் ஒரேநாளில் 19பேர் உயிரிழந்ததால் இறப்பு எண்ணிக்கை 251 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் 7-வது முறையாக இரட்டை இலக்க எண்ணிக்கையில் உயிரிழப்பு பதிவாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 633 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கொரோனாவால் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 15,762ல் இருந்து 16,395 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து 7-வது நாளாக ஒரே நாளில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டி பதிவாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com