கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: அரசு அலுவலகங்களில் கைரேகை வருகை பதிவு - தற்காலிகமாக நிறுத்தம்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அரசு அலுவலகங்களில் கைரேகை வருகை பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
Published on

திருப்பூர்,

சீனாவின் ஹூபெய் மாகாணம் உகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் ஏராளமான நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலர் பலியாகியுள்ளார்கள்.

இதன் காரணமாக பல நாடுகளில் முன்னெச்சரிக்கை மற்றும் வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இங்கு ஆடை தயாரிப்பு மற்றும் கறிக்கோழி, எண்ணெய் உற்பத்தி உள்பட ஏராளமான தொழில்கள் இருந்து வருகிறது. இந்த தொழில்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதில் குறிப்பாக வடமாநிலங்களில் இருந்தும் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இதன் காரணமாக திருப்பூரில் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. பல்வேறு பகுதிகளில் மருந்து தெளிக்கும் பணியும் நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த கொரோனா வைரஸ் தொடர்பாக பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை போலவே அரசு அலுவலங்களில் வேலை செய்யும் அரசு அதிகாரிகளுக்கும், இந்த வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என்பது உள்பட கொரோனா வைரசை தடுக்க மற்றும் முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கு தேவையான வழிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அச்சத்தின் காரணமாக பல அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அரசு ஊழியர்கள், டாக்டர்கள், பணியாளர்கள் தங்களது வருகையை கைரேகை பதிவு எந்திரத்தில் வைத்து பதிவு செய்வார்கள். தற்போது கொரோனா வைரஸ் எதிரொலியின் காரணமாக இந்த கைரேகை பதிவு எந்திரத்தை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளனர். பலர் அலுவலகங்களில் வருகிற 31-ந் தேதி வரை என தேதி குறிப்பிட்டும் கைரேகை பதிவு எந்திரம் தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அறிவித்து சுவரொட்டி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com