மதுரை மாவட்டத்தில் மேலும் 320 பேருக்கு கொரோனா தொற்று

மதுரை மாவட்டத்தில் மேலும் 320 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் மேலும் 320 பேருக்கு கொரோனா தொற்று
Published on

மதுரை,

மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி மேலும் 320 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம், மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,077-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக மதுரையில் இதுவரை -111 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4163 ஆகவும் குணமடைந்தோர் எண்ணிக்கை 1803- ஆகவும் உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com