புதுடெல்லி,
தலைநகர் டெல்லி உட்பட வடமாநிலங்களில் கடுமையான பனி மூட்டம் நிலவுகிறது. இதனால், டெல்லியில் காலை நேரங்களில் எங்கு பார்த்தாலும் பனிப்படலமாக காட்சி அளிக்கிறது.
சில அடி தூரமே கண்ணுக்கு புலப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர். பனி மூட்டம் காரணமாக டெல்லிக்கு வர வேண்டிய ரயில்களும் தாமதம் ஆகின. 11 ரயில்கள் தாமதம் ஆனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் தரமும் மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது.