நிதின் கட்காரி பயணம் செய்ய இருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு

நிதின் கட்காரி பயணம் செய்ய இருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருந்தது தெரியவந்ததையடுத்து விமானத்தின் புறப்பாடு ரத்து செய்யப்பட்டது.
Published on

நாக்பூர்,

மராட்டிய மாநிலம் நாக்பூரில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் புறப்பட இருந்தது. இந்த விமானத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி உள்பட ஏராளமான பயணிகள் இருந்தனர். விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன், விமானத்தில் தீவிர தொழில்நுட்ப கோளாறு இருந்ததை விமானி கண்டறிந்தார்.

இதையடுத்து, உடனடியாக விமானம் ஓடுபாதையில் இருந்து, விமானம் நிறுத்தப்படும் டாக்ஸிவேவுக்கு கொண்டு வரப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேறினர். உரிய நேரத்தில் விமானி தொழில்நுட்ப கோளாறை கண்டறிந்ததால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com