ஈரானில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மாலுமியை மீட்க கோரி முதலமைச்சர் கடிதம்

ஈரானில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மாலுமி உள்பட 18 இந்தியர்களை மீட்க கோரி மத்திய அரசுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.
ஈரானில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மாலுமியை மீட்க கோரி முதலமைச்சர் கடிதம்
Published on

சென்னை,

ஈரானில் சிறைபிடிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த ஆதித்ய வாசுதேவன் என்ற மாலுமி உள்பட 18 இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில், கடந்த மாதம் 19ஆம் தேதி இம்பெரோ என்ற கப்பலில் ஆதித்யா உள்பட 18 இந்தியர்கள் சென்ற போது ஈரான் அருகேயுள்ள ஹார்மோஸ் நீரிணை பகுதியில் அந்நாட்டு பாதுகாப்பு படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆதித்ய வாசுதேவன் உள்பட சிறைபிடிக்கப்பட்ட 18 இந்தியர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com