ரூ.35 கோடி கொடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜ.க. முயற்சி; திக்விஜய் சிங் பரபரப்பு குற்றச்சாட்டு

மத்திய பிரதேசத்தில் ரூ.35 கோடி லஞ்சம் கொடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜ.க. முயற்சிக்கிறது என திக்விஜய் சிங் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
Published on

புதுடெல்லி,

மத்திய பிரதேசத்தில் முதல் மந்திரி கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. எதிர்க்கட்சியாக பா.ஜ.க. இருந்து வருகிறது. இந்நிலையில், மத்திய பிரதேச முன்னாள் முதல் மந்திரியான திக்விஜய் சிங் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார்.

அவர் கூறும்பொழுது, மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. எதிர்க்கட்சியாக ஆனதில் இருந்து, மாநிலத்தில் கடந்த 15 வருடங்களாக கொள்ளையடித்து சுருட்டிய சிவராஜ் சிங் சவுகான், நரோட்டம் மிஷ்ரா உள்ளிட்ட அனைவரும் வெளிப்படையாக ரூ.25 கோடி முதல் ரூ.35 கோடி வரை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு லஞ்சம் கொடுத்து தங்கள் பக்கம் இழுக்க முயற்சிக்கின்றனர்.

இதன்படி முதல் தவணையாக ரூ.5 கோடியும், நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள் நியமனத்திற்கு பின்னர் 2வது தவணை தொகையும், பின்பு மத்திய பிரதேச அரசு கவிழ்ந்த பின்னர் இறுதி தவணை தொகையும் தரப்படும் என தெரிவித்து உள்ளார்.

இதனால் மத்திய பிரதேச முதல் மந்திரியாக வந்து விடுவதுடன், துணை மந்திரியாக மிஷ்ராவை கொண்டு வந்து விடலாம் என சவுகான் கனவு காண்கிறார்.

ஆனால் கர்நாடகாவில் நடந்தது போன்று இல்லாமல், மத்திய பிரதேசத்தில் எம்.எல்.ஏ.க்கள் விற்பனைக்கு இல்லை. சான்று இல்லாமல் எந்த குற்றச்சாட்டுகளையும் நான் கூறுவதில்லை என்றும் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com