

சென்னை,
தினத்தந்தி மற்றும் சத்யா இணைந்து நடத்தும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி-விற்பனை சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று தொடங்கியது.
கண்காட்சியை சத்யா நிறுவனத்தின் தலைவர் ஜான்சன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஜான்சனின் மகன் ஜாக்சன், கேரியர் நிறுவனத்தின் பிராந்திய மேலாளர் வெங்கடேஷ், அபி இம்போர்ட்ஸ் மற்றும் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் லட்சுமணன், பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் தேசிய தலைமை அதிகாரி கமலேஷ்வரன், மண்டல மேலாளர் ஜிந்தன் சனா, பிராந்திய மேலாளர் இளவேனில் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.
3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சி-விற்பனை, நாளையுடன்(ஞாயிற்றுக் கிழமை) நிறைவு பெறுகிறது. காலை 10 மணி முதல் இரவு 8.30 மணி வரை பார்வையிடலாம். அனுமதி இலவசம்.