எல்லைப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர தூதரக கதவுகள் திறந்தே இருக்கின்றன: சீனா சொல்கிறது

இந்தியாவுடனான எல்லைப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர தூதரக கதவுகள் திறந்தே இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
எல்லைப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர தூதரக கதவுகள் திறந்தே இருக்கின்றன: சீனா சொல்கிறது
Published on

புதுடெல்லி,

சிக்கிம் மாநில எல்லையில் டோக்லாம் பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அப்பகுதியில் தற்போதைய நிலையை மாற்றும் முயற்சியில் சீனா இறங்கி உள்ளது. இதனால் அங்கு இந்திய படைகள் குவிக்கப்பட்டன. இதையடுத்து இந்தியாசீனா இடையே போர் பதற்றம் ஏற்பட்டது.இந்நிலையில் இப்பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை மூலம் சுமுக முடிவு காண இந்தியா விரும்புகிறது. ஆனால் இந்திய படைகளை வாபஸ் பெற்றால் தான் பேச்சுவார்த்தை நடைபெறும் என சீனா பிடிவாதம் பிடிக்கிறது.

இது பற்றி வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கோபால் பாக்லே டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:டோக்லாம் பிரச்சினை குறித்து இந்தியா அமைதியான முறையில் தூதரக பேச்சுவார்த்தை மூலம் சுமுக முடிவு காண விரும்புகிறது. இதில் சர்ச்சை எதுவும் ஏற்படக்கூடாது என இந்தியா உறுதியாக உள்ளது.சீன எல்லையில் உள்ள அந்நாட்டு படைகளை திரும்ப பெற வேண்டும் என்று பூடான் வலியுறுத்தி உள்ளது.

இதையே தான் இந்தியாவும் கூறி வருகிறது. எல்லை பிரச்சினை குறித்து சீன அதிபருடன், பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.இரு தரப்பினரிடையே மீண்டும் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற உள்ளது. அதில் யார் பங்கேற்பார்கள்? எப்போது நடைபெறும்? எங்கு நடைபெறும் என்பதை தற்போது தெரிவிக்க இயலாது. சீனாவில் 27, 28ந்தேதிகளில் நடைபெறும் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் பங்கேற்பது உறுதி.இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில், சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் லூ காங் செய்தியாளர்களிடம் பேசுகையில், சிக்கிம் மோதல் தொடர்பாக இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு தூதரக கதவுகள் திறந்தே இருக்கின்றன. எனினும் அர்த்தமுள்ள வகையில் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்றால், டோக்லாம் பகுதியில் இருந்து தனது படைகளை இந்தியா வாபஸ் பெறவேண்டும். இதுவே முன் நிபந்தனையாகவும் இருக்கும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com