அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு ரூ.2 ஆயிரம் நோட்டை ஜெராக்ஸ் எடுத்து டோக்கனாக வழங்கிய தி.மு.க.வினர்

அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் ரூ.2 ஆயிரம் நோட்டை ஜெராக்ஸ் எடுத்து வாக்காளர்களுக்கு டோக்கனாக தி.மு.க.வினர் வழங்குவதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார்.
அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு ரூ.2 ஆயிரம் நோட்டை ஜெராக்ஸ் எடுத்து டோக்கனாக வழங்கிய தி.மு.க.வினர்
Published on

கரூர்,

அரவக்குறிச்சி தொகுதி வாக்காளர்களை ஒவ்வொரு பகுதியிலும் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் ஆங்காங்கே அடைத்து வைத்து கொண்டு, நாங்கள் 3 மணிக்கு மேல் ரூ.2 ஆயிரம் தருகிறோம். அதன்பிறகு வாக்களிக்க செல்லுங்கள் என்று கூறி உள்ளனர்.

மேலும், கார்வழி ஊராட்சியில் தி.மு.க.வின் ஒன்றிய பொருளாளர் ஜெகன்நாதன் ஸ்டார் குறியீடு போடப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டை ஜெராக்ஸ் எடுத்து வைத்து கொண்டு வாக்காளர்களுக்கு டோக்கனாக வினியோகித்துள்ளார். போலீஸ் வரும்போது, அதனை அந்த ஜெராக்ஸ் நோட்டை போட்டு ஓடிவிட்டார்.

வாக்காளர்கள் அடைத்து வைப்பு

அதிலும் குறிப்பாக வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, நொய்யல் உள்ளிட்ட இடங்களில் கொடுத்துள்ளனர். இது தோல்வி பயத்தினால் எதிர்கட்சி வேட்பாளரின் அராஜக செயலை காட்டுகிறது. ஜெயித்தால் பணம் தருவோம் எனவும், மதியம் 3 மணிக்கு மேல் பணம் கொடுப்போம் என கூறியிருக்கின்றனர்.

திருக்காடுதுறை, காந்திநகர், புகளூர் ரோடு உள்ளிட்ட இடங்களில் வாக்காளர்களை அடைத்து வைத்திருப்பதால் வாக்குப்பதிவு குறைந்து இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. பலவிதமான டோக்கன் மக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. இது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல் ஆகும்.

இதுதொடர்பாக சென்னை, டெல்லியில் தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் மற்றும் ஐ.ஜி., போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளிடமும் புகார் அளித்து உள்ளோம். முன்பு தேர்தல் பிரசாரத்தின்போது முதல்-அமைச்சர் உள்ளிட்டோர் வந்த சமயத்தில், எங்களது வேட்பாளர் தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும் போதும் எதிர்க்கட்சி வேட்பாளர் இதுபோன்ற தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபட்டார்.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com