உளுந்தூர்பேட்டை தொகுதியில் குறைதீர்க்கும் முகாம்: குமரகுரு எம்.எல்.ஏ., பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார்

உளுந்தூர்பேட்டை தொகுதியில் நடந்த குறைதீர்க்கும் முகாமில் குமரகுரு எம்.எல்.ஏ. பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார்.
உளுந்தூர்பேட்டை தொகுதியில் குறைதீர்க்கும் முகாம்: குமரகுரு எம்.எல்.ஏ., பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார்
Published on

உளுந்தூர்பேட்டை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி உளுந்தூர்பேட்டை தொகுதியில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்கள் நேற்று முன்தினம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

2-ம் நாளான நேற்று களமருதூர் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் உளுந்தூர்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. குமரகுரு கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றார்.

இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் வேல்முருகன், மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் செண்பகவேல், உளுந்தூர்பேட்டை வீடு கட்டும் சங்க தலைவர் பரமாத்மா, களமருதூர் கூட்டுறவு சங்க தலைவர் ஆனந்தன், பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவர் ராஜாராம் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் வேம்பு தணிகாசலம், பாஸ்கர், கண்ணதாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 3-வதுநாளாக இன்றும்(சனிக்கிழமை) உளுந்தூர்பேட்டை தொகுதியில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்கள் நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com