தர்மபுரியில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நீட்தேர்வு, மத்திய அரசின் கல்வி கொள்கையை ரத்து செய்ய வலியுறுத்தி தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தர்மபுரியில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
Published on

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நீட்தேர்வு, மத்திய அரசின் கல்வி கொள்கையை ரத்து செய்ய வலியுறுத்தி தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ஏங்கல்ஸ் தலைமை தாங்கினார். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அர்ஜூனன் வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் சிவாஜி, செயலாளர் காமராஜ், மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தர்மபுரி மண்டல தலைவர் தமிழ்ச்செல்வன், தலைமை பேச்சாளர் அன்பழகன், மாநில அமைப்பு செயலாளர் ஊமை ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் நிர்வாகிகள் செல்லதுரை, சின்னசாமி, பூவரசன் உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com