கொளுத்தும் கோடை வெயில் எதிரொலி: எலுமிச்சை பழம் விலை உயர்வு - கிலோ ரூ.150-க்கு விற்பனை

கோடை வெயில் கொளுத்துவதால் எலுமிச்சை பழம் விலை உயர்ந்து உள்ளது. ஒரு கிலோ ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டது.
Published on

தேனி,

தேனியில் கடந்த ஒரு மாதகாலமாகவே வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. பகல் நேரங்களில் அனல் காற்று வீசுகிறது. கொளுத்தும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

பகல் நேரங்களில் மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வருவதற்கு தயக்கம் காட்டும் நிலைமை உள்ளது. கோடை வெயிலில் இருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக உடலுக்கு குளிர்ச்சியூட்டும் பானங்களை வாங்கி பருகுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், இளநீர், பழச்சாறு, கரும்புச்சாறு விற்பனை கடைகளிலும், கம்பங்கூழ், தர்பூசணி விற்பனை செய்யும் இடங்களிலும் மக்கள் கூட்டம் குவிந்து வருகிறது.

கோடை காலம் வந்து விட்டாலே பலருக்கும் எலுமிச்சை பழச்சாறு பருகுவது பிடித்தமானது. எலுமிச்சை பழங்களின் தேவை கோடை காலத்தில் அதிகம் இருக்கும். அந்த வகையில் எலுமிச்சை பழங்களின் பயன்பாடும், தேவையும் அதிகரித்து உள்ளதால் விலையும் உயர்ந்து உள்ளது.

கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை எலுமிச்சைபழம் விற்பனை செய்யப்பட்டது. தற்போது தேனியில் ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.130 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் எலுமிச்சை பழச்சாறு, சர்பத் விலையும் உயர்ந்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com