அமெரிக்கா, ஈரான் இடையே மோதல் எதிரொலி: பாரசீக வளைகுடா பகுதியில் கூடுதலாக அமெரிக்க படைகள் குவிப்பு - டிரம்ப் உத்தரவு

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் காரணமாக பாரசீக வளைகுடா பகுதியில் கூடுதலாக அமெரிக்க படை வீரர்களை குவிக்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
Published on


* ஈரானில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து, அரசுக்கு எதிராக கடந்த ஒரு வாரமாக நடந்து வரும் போராட்டத்தில் இதுவரை 106 பேர் பலியானதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையே நாட்டில் இயல்பு நிலை திரும்பும் வரை இணையதள சேவை முடக்கம் தொடரும் என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

* ஆப்கானிஸ்தானில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் திடீரென தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் அமெரிக்க வீரர்கள் 2 பேர் பலியானார்கள். விபத்துக்கான காரணம், விபத்து நடந்த இடம் மற்றும் பலியான அமெரிக்க வீரர்கள் பெயர் உள்ளிட்ட எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.

* சர்ச்சைக்குரிய மேற்குகரை பகுதியில் இஸ்ரேல் அமைத்துள்ள யூத குடியிருப்புகள் சட்டவிரோதமானவை அல்ல என அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவுக்கு ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்ரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

* அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் காரணமாக பாரசீக வளைகுடா பகுதியில் பதற்றம் நீடித்தும் வரும் நிலையில் அங்கு கூடுதலாக அமெரிக்க படை வீரர்களை குவிக்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார்.

* அர்ஜென்டினாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சான் லூயிஸ் நகரில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

* நெதர்லாந்தில் இருந்து இங்கிலாந்துக்கு புறப்பட தயாராக இருந்த கப்பலில் குளிரூட்டப்பட்ட கன்டெய்னரில் அகதிகள் 25 பேர் அடைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நெதர்லாந்து அதிகாரிகள் அவர்களை மீட்டு மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com