வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்று கூறி 8 மன நோயாளிகள் அலைக்கழிப்பு

தனியார் மனநல காப்பகத்தில் இருந்து மனநோயாளிகள் 8 பேர் மாமல்லபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு அழைத்து வரப்பட்டனர்.
Published on

மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் மனநல காப்பகத்தில் இருந்து மனநோயாளிகள் 8 பேர் மாமல்லபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு வாக்காளர் பட்டியலில் அவர்கள் பெயர் இல்லை என்று கூறி வாக்குச்சாவடி அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. பின்னர் கணினி மூலம் அவர்கள் பெயர் பட்டியலில் இருந்ததை பார்த்தனர். பின்னர் ஒரு மணி நேர அலைக்கழிப்புக்கு பின்னர் அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். வாக்களித்த பிறகு அவர்கள் வேன் மூலம் காப்பகத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

தேர்தல் அலுவலர்களின் மெத்தனப்போக்கே இதற்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மன நோயாளிகளை காக்க வைத்திருந்த சம்பவம் அங்கு ஓட்டு போட வந்த பொதுமக்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com