கொடுமுடியில் வேலைவாய்ப்பு முகாம்

கொடுமுடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
Published on

கொடுமுடி,

தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் கொடுமுடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. மொடக்குறிச்சி வி.பி.சிவசுப்பிரமணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். மகளிர் திட்ட உதவி அலுவலர் அன்பழகன் முன்னிலை வகித்தார். இதையொட்டி கொடுமுடி, சிவகிரி, தாமரைப்பாளையம், நடுப்பாளையம், கொளத்துப்பாளையம் பகுதிகளுக்கு உள்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடன் தொகையாக ரூ.83 லட்சத்து 25 ஆயிரத்தையும் வழங்கினார்.

இதில் ஒன்றியக்குழு தலைவர்கள் லட்சுமி ராஜேந்திரன் (கொடுமுடி), கணபதி (மொடக்குறிச்சி), கொடுமுடி பேரூராட்சி முன்னாள் தலைவர் சரவணன், துணைத்தலைவர் மனோகரன், முன்னாள் கவுன்சிலர்கள் வெண்ணிலா பாலு, பாஸ்கரசேதுபதி, எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் பெரியதம்பி, மாணவர் அணி செயலாளர் சதாஸ் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல் வரவேற்று பேசினார். முடிவில் உதவி திட்ட அலுவலர் பாஸ்கர் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com