சென்னை திருவான்மியூரைச் சேர்ந்தவர் அருண்குமார். இவருடைய மகன் வினோத் குமார் (வயது 28). என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு கம்பெனி வேலையாக கும்மிடிப்பூண்டி வரை மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.பின்னர் எண்ணூர் அன்னை சிவகாமி நகரில் உள்ள அக்கா வீட்டில் தங்கி இருந்த தனது தாயாரை அழைத்துச்செல்ல எர்ணாவூர் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் இருந்து வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த வினோத்குமார், அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். சம்பவம் குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து என்ஜினீயர் வினோத்குமார் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை வைத்து தேடி வருகின்றனர்.