ஈவ் டீசிங் சம்பவம்: இளம்பெண்ணின் பேஸ்புக் பதிவால் இளைஞர் கைது

சாலையில் தனியாக நடந்து சென்ற இளம்பெண்ணை ஈவ் டீசிங் செய்த இளைஞர் பேஸ்புக் பதிவால் கைது செய்யப்பட்டார்.
Published on

மங்களூரு,

கர்நாடகாவில் மங்களூரு நகரில் ஜெப்பு என்ற பகுதியை சேர்ந்தவர் ரிஸ்வான் (வயது 29). இவர், சாலையில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த ரேஷ்மி என்ற இளம்பெண்ணை தனது ஸ்கூட்டரில் பின் தொடர்ந்து சென்று ஈவ் டீசிங் செய்துள்ளார்.

இந்த சம்பவத்தினை தொடர்ந்து கடந்த ஜூன் 25ந்தேதி ரேஷ்மி புகைப்படம் ஒன்றை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதில், ஸ்கூட்டரின் நம்பர் பிளேட் தெளிவாக இருந்துள்ளது.

இந்த புகைப்படம் சமூக ஊடகத்தில் பரவி பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து போலீசார் தாமாக முன்வந்து வழக்கு ஒன்று பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் ரிஸ்வான் கைது செய்யப்பட்டு உள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com