நைஜீரியாவில் கியாஸ் நிலையத்தில் வெடிவிபத்து; 5 பேர் பலி

நைஜீரியாவில் கியாஸ் நிலையத்தில் கசிவு ஏற்பட்டு பயங்கர வெடி விபத்து ஏற்படது.
Published on

லாகோஸ்,

நைஜீரியாவின் வடக்கு பகுதியில் உள்ள கடுனா மாகாணத்தின் சாபோ தஸ்கா நகரில் வாகனங்களுக்கு கியாஸ் விற்பனை செய்யும் நிலையம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் கியாஸ் விற்பனை நடைபெற்று கொண்டிருந்தது.

அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் அங்கு கியாஸ் கசிவு ஏற்பட்டு பயங்கர வெடி விபத்து நேரிட்டது. அதனை தொடர்ந்து கியாஸ் நிலையம் தீப்பிடித்து எரிந்தது.

இந்த கோர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 4 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com