குளித்தலை அருகே தந்தை-மகன் படுகொலை செய்யப்பட்ட இடத்தை திருச்சி சரக டி.ஐ.ஜி. பார்வையிட்டார்

குளித்தலை அருகே தந்தை-மகன் படுகொலை செய்யப்பட்ட இடத்தை திருச்சி சரக டி.ஐ.ஜி. பார்வையிட்டார்.
Published on

நச்சலூர்,

திருச்சி மாவட்டம் இனாம்புலியூரை சேர்ந்தவர் வீரமலை (வயது 60) விவசாயி. இவருடைய மகன் நல்லதம்பி(42). இவர்களை கடந்த 29-ந்தேதி 6 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இது குறித்து இறந்த வீரமலையின் மகள் அன்னலெட்சுமி குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக திருச்சி சரக டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் நேற்று சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.

விளக்கம்

தொடர்ந்து கொலை செய்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் விதங்கள் மற்றும் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பாதுகாப்புகள் குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் விளக்கங்களை கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமார், குளித்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com