கொரோனா சிகிச்சை மையத்தில் பெண் கற்பழிப்பு; கைதான குற்றவாளிக்கு பாதிப்பு

மராட்டியத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவத்தில் கைதான குற்றவாளிக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
Published on

நவிமும்பை,

மராட்டியம் நாட்டிலேயே அதிக கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை கொண்டுள்ளது. மும்பை, புனே மற்றும் நாக்பூர் உள்ளிட்ட நகரங்கள் பாதிப்புக்கு அதிக இலக்காகி உள்ளன. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, அச்சத்துடனேயே உள்ளனர்.

இந்நிலையில், கொரோனா பாதித்தவர் என்ற சந்தேகத்தில் 40 வயது பெண் ஒருவர் நவிமும்பை நகரில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்டு உள்ளார். இதேபோன்று மற்றொரு நபர் கொரோனா சிகிச்சை பெற்று வந்துள்ளார். அந்நபரின் சகோதரர் அந்த மையத்திற்கு வந்து போகும்பொழுது பெண்ணை சந்தித்து உள்ளார்.

அவருக்கு உதவி செய்வதுபோல் நட்பை வளர்த்து கொண்டார். இதனை பயன்படுத்தி நேற்றிரவு அந்த பெண்ணை கற்பழித்து உள்ளார். இதுபற்றி பன்வேல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது. ஆனால், கைதான குற்றவாளிக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com