சென்னை,
இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.3000 நிதி உதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மேலும் வறுமையில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ. 3000 நிதியுதவி 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏழ்மையில் உள்ள மாணவர்கள் சட்டப்படிப்பை முடித்துவிட்டு வழக்கறிஞர்களாக பணியாற்ற 3 ஆண்டுகள் தேவைப்படுவதால் அவர்களுக்கு நிதி உதவி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.