அமெரிக்காவில் 5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்து : 5 பேர் சாவு

அமெரிக்காவில் 5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டதில் 5 பேர் உயிரிழந்தனர்.
Published on

நியூயார்க்,

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிளசன்ட் மவுண்ட் நகரில் மலைப்பகுதியை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து சென்று கொண்டிருந்தன. அப்போது சுற்றுலா பஸ் ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்த சரக்கு லாரியை முந்தி செல்ல முற்பட்டபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. பின்னர் அந்த பஸ் மீது லாரி மோதி கவிழ்ந்தது.

அதனை தொடர்ந்து, பின்னால் வந்து கொண்டிருந்த 2 சரக்கு லாரிகள் மற்றும் ஒரு கார் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாயின.

இந்த கோர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com