

சுந்தர் சி. நடித்து தயாரிக்க, வி.இசட்.துரை டைரக்டு செய்த படம் இருட்டு. இந்தப் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இருவரும் ஒரு புதிய படத்தில் மீண்டும் இணைந்து இருக்கிறார்கள்.
சுந்தர் சி. நடித்து தயாரித்த தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்குவது என்று இருவரும் முடிவு செய்து இருக்கிறார்கள். இதில் சுந்தர் சி. கதாநாயகனாக நடிக்கிறார். வி.இசட்.துரை டைரக்டு செய்கிறார். அதோடு இவர், எஸ்.எம்.பிரபாகரனுடன் இணைந்து படத்தை தயாரிக்கிறார்.
இவர் தயாரிக்கும் முதல் படம், இது. மற்ற நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் முடிவாகவில்லை.