ஓமலூர் முன்னாள் எம்.எல்.ஏ. இல்ல திருமண வரவேற்பு விழா:மணமக்களுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து

ஓமலூர் முன்னாள் எம்.எல்.ஏ. இல்ல திருமண வரவேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
Published on

ஓமலூர்,

ஓமலூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசு-ஜெயந்தி தம்பதியின் மகள் டாக்டர் சரண்யாவுக்கும், வாழப்பாடி பேளூர் வீரவேல்சாமி-கலைச்செல்வி தம்பதியின் மகன் டாக்டர் தமிழ்செல்வனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அவர்களது திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில், மணமக்கள் சரண்யா-தமிழ்செல்வன் ஆகியோரின் திருமண வரவேற்பு விழா ஓமலூர் பைபாஸ் சாலையில் உள்ள எம்.ஆர்.பி.முத்து மகாலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

இதையொட்டி நேற்று இரவு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார். முன்னதாக முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசு-ஜெயந்தி, லலிதா அர்சுணன், சரண்குமார் தமிழரசு மற்றும் மணமகன் வீட்டார் வீரவேல்சாமி-கலைச்செல்வி, டாக்டர் பிரபாகரன் ஆகியோர் மு.க.ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இந்த திருமண வரவேற்பு விழாவில், தி.மு.க. மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com