அல் கொய்தாவின் வட ஆப்பிரிக்கா தலைவர் கொலை- பிரான்ஸ்

அல் கொய்தாவின் வட ஆப்பிரிக்கா தலைவரை தனது ராணுவம் கொன்றதாக பிரான்ஸ் கூறி உள்ளது.
Published on

பாரீஸ்

ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக தேடப்பட்டு வந்த முக்கிய பயங்கரவாதியான அல்-கொய்தாவின் ஆப்பிரிக்கா (AQMI) தலைவர் அப்தெல்மலேக் ட்ரூக்டெல்

வடக்கு மாலியில் நடந்த தாக்குதலின் போது அப்தெல்மலேக் ட்ரூக்டெல் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

ஜூன் 3 ம் தேதி, பிரான்ஸ் இராணுவப் படைகள் உள்ளூர் கூட்டுப்படைகளின் ஆதரவோடு வடக்கு மாலியில் நடந்த தாக்குதலின் போது அப்தெல்மலேக் ட்ரூக்டெல் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகள் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் ஆயுதப்படை அமைச்சர் புளோரன்ஸ் பார்லி டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

ட்ரூக்டெல் வட ஆப்பிரிக்காவின் மிகவும் அனுபவம் வாய்ந்த தலைவர்களில் ஒருவராக இருந்தார், மேலும் 2013ல் பிரான்ஸ் இராணுவத் தலையீட்டிற்கு முன்னர் வடக்கு மாலியை கையகப்படுத்துதலில் பங்கேற்றவர்களில் முக்கிய ஒருவராக இருந்தார்.

ட்ரூக்டெல் வடக்கு அல்ஜீரியாவின் மலைகளில் மறைந்திருப்பதாக நம்பப்பட்டது. இந்த குழு வடக்கு மாலி, நைஜர், மவுரித்தேனியா மற்றும் அல்ஜீரியா முழுவதும் செயல்படுகிறது.பிராந்தியத்தில் சுமார் 5,200 எண்ணிக்கையிலான பிரான்ஸ் படைகள் இருப்பதாகவும், மே-19 அன்று மொஹமத் அல் மிராபத் என்ற பயங்கரவாதியை பிடித்ததாக பார்லி கூறினார்.

மொகமது அல் மிராபத் முன்னாள் பிராந்திய தலைவர் என்றும், கிரேட்டர் சஹாராவில் ஐஎஸ் உறுப்பினர் என்றும் அடையாளம் காணப்பட்டதாக பார்லி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com