பிரெக்ஸிட்: பிரிட்டன் 115 பில்லியன் டாலர்களைக் கொடுக்க வேண்டும் - பிரான்ஸ்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற 115 பில்லியன் டாலர்களை கொடுக்க வேண்டும் என்று பிரான்ஸ் பொருளாதார அமைச்சர் கூறியுள்ளார்.
Published on

பாரிஸ்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டுமென்றால் முதலில் 100 பில்லியன் டாலர்களை செலுத்த வேண்டும். இதை பேச்சுவார்த்தை துவங்கும் முன்னரே செலுத்த வேண்டும் என்று பிரஞ்சு பொருளாதார அமைச்சர் லீ மெயர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பட்ஜெட்டிற்கு கொடுப்பதாக பிரிட்டன் ஒப்புக்கொண்டுள்ளபடி இப்பணத்தை கொடுக்க வேண்டும். இப்பணத்தைப் பற்றி பேரம் எதையும் பேச முடியாது. பிரிட்டன் வெளியேறும் பேச்சுவார்த்தை துவக்கும் முன்னரே இதைச் செலுத்த வேண்டும் என்றார் மெய்ரே. இதன் அளவு 115 பில்லியன் டாலர்கள் (100 பில்லியன் யூரோக்கள்) அளவிற்கு இருக்கலாம் என்றார் மெய்ரே.

பிரபல முன்னாள் இங்கிலாந்து பிரதமர் மார்க்கெரட் தாட்சர் கூறியது போல எங்களுக்கு எங்களது பணம் திரும்ப கிடைக்க வேண்டும் என்று மேற்கோள் காட்டி கூறினார் மெய்ரே.

பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் பேசுகையில் அவர் இதைக் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com