மதுரை,
கொரோனா ஊரடங்கால் மதுரை கோட்ட ரெயில்வேயில் இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரெயில்களின் சேவை நிறுத்தப்பட்டது. இதற்கிடையே, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், மதுரையில் இருந்து ராமேசுவரத்துக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, இந்த ரெயில் (வ.எண்.06654), வருகிற 7-ந் தேதி ராமேசுவரத்தில் இருந்து அதிகாலை 5.40 மணிக்கு புறப்பட்டு காலை 9.30 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடையும். மறுமார்க்கத்தில், இந்த ரெயில் (வ.எண்.06655) மதுரையில் இருந்து மாலை 6.10 மணிக்கு புறப்பட்டு இரவு 10 மணிக்கு ராமேசுவரம் சென்றடையும்.
இந்த ரெயில்கள் பாம்பன், மண்டபம், உச்சிப்புளி, ராமநாதபுரம், சத்திரக்குடி, பரமக்குடி, சூடியூர், மானாமதுரை, திருப்பாசேத்தி, திருப்புவனம், சிலைமான், கீழ்மதுரை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.