விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு

திருவள்ளூர் மாவட்டத்தில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்குவதற்கான விழா நடந்தது.
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழக முதல்-அமைச்சர் கோப்பைக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்குவதற்கான விழா நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கலந்துகொண்டு தமிழக முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசுகளையும், பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் அருணா மற்றும் திரளான அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com