நம்பியூர் அருகே விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் 8-ந் தேதி நடக்கிறது

நம்பியூர் அருகே உள்ள விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் 8-ந் தேதி நடக்கிறது.
Published on

நம்பியூர்,

நம்பியூர் அருகே அஞ்சானூர் கிராமம் பனங்காட்டுப்பாளையத்தில் விநாயகர், அருள் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த திருப்பணி நடைபெற்று வந்தது.

பணி முடிவடைந்ததை தொடர்ந்து வருகிற 7-ந் தேதி தீர்த்தகுடம், முளைப்பாரி எடுத்து வருதல் நிகழ்ச்சியுடன் கும்பாபிஷேக விழா தொடங்குகிறது. தொடர்ந்து திருவிளக்கு வழிபாடு, புனிதநீர் வழிபாடு, விநாயகர் வழிபாடு, திருமகள் வழிபாடு உள்ளிட்டவை நடக்கிறது.

இரவு 7.45 மணிக்கு முதல் கால வேள்வி பூஜையும், விமான கலசம் பொருத்துதலும், எண்வகை மருந்து சாத்துதலும் நடைபெறுகிறது. இ்ரவு 8.45 மணி அளவில் வேள்வி நிறைவும் பேரொளி வழிபாடும் நடக்கிறது.

8-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு திருப்பள்ளியெழுச்சியும், காப்பு அணிவித்தலும், காலை 7.30 மணிக்கு கலசங்கள் புறப்பாடு நடக்கிறது. 8 மணிக்கு முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு பேரொளி வழிபாட்டை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com