விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டார்.
Published on

புதுடெல்லி

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்த சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ உள்ளிட்ட பிரிவுகளை ரத்து செய்வதாக மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. மேலும், காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதாகவும் அறிவிப்பை வெளியிட்டு உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தது.

இந்த சட்ட திருத்தத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. காங்கிரஸ் மூத்த தலைவரும், எதிர்க்கட்சித் தலைவரும் காஷ்மீரை சேர்ந்தவருமான குலாம் நபி ஆசாத் பலத்த எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தில் பேசினார்.

இந்த நிலையில் குலாம் நபி ஆசாத் மற்றும் ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் குலாம் அகமது மிர் ஆகியோர் காஷ்மீர் வந்தனர். அவர்களை போலீசார் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தி வைத்து உள்ளனர்.

குலாம் நபி ஆசாத் தடுத்து நிறுத்தப்பட்டது குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு குலாம் நபி ஆசாத் ஸ்ரீநகருக்குள் நுழைந்தால் பிரச்சினை ஏற்படும் என்பதால் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளார் என கூறி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com