துணை ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் கோபால கிருஷ்ண காந்தி வேட்பு மனு தாக்கல்

துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள கோபால கிருஷ்ண காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
Published on

புதுடெல்லி,

துணை ஜனாதிபதியாக இருக்கும் ஹமீது அன்சாரியின் பதவி காலம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந் தேதியுடன் முடிவடைவதால் அவருக்கு பதிலாக புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்து எடுக்க ஆகஸ்டு 5-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. துணை ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகள் கூட்டணியின் சார்பில் மேற்கு வங்காள முன்னாள் கவர்னர் கோபால கிருஷ்ண காந்தி போட்டியிடுகிறார். பாரதீய ஜனதா கூட்டணியின் சார்பில், துணை ஜனாதிபதி பதவிக்கு வெங்கையா நாயுடு போட்டியிடுகிறார்.

எதிர்க்கட்சிகளின் சார்பில் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் கோபால கிருஷ்ண காந்தி, இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலின் போது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அதேபோல், ஆளும் பாஜக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வெங்கையா நாயுடுவும் தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com