சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரியை உயர்த்த திட்டம்..?

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
Published on

புதுடெல்லி

அண்டை நாடுகளுடனான எல்லை பதட்டங்களுக்கு மத்தியில், முக்கியமாக சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல தயாரிப்புகளுக்கான சுங்க வரி உயர்வு குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை எதுவும் இறுதி செய்யப்படவில்லை என்றாலும், அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியைக் குறைப்பதில் கவனம் செலுத்தப்படும் என்றும் அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

முக்கியமாக சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி உயர்வு குறித்து விவாதம் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா மொத்தம் சராசரியாக 16 சதவீதம் சீனாவிலிருந்து இறக்குமதி செய்கிறது. மறுபுறம், இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில், சீனாவின் பங்கு வெறும் 3.2 சதவீதம் மட்டுமே. கடந்த ஏப்ரல் 2019 முதல் பிப்ரவரி 2020 வரை, இந்தியா 62 அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்துள்ளது. அதேவேலையில் அண்டை நாட்டிற்கான ஏற்றுமதி 15.5 பில்லியன் அமெரிக்க டாலராக மட்டுமே இருந்தது.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முக்கிய பொருட்களில் சுவர் கடிகாரங்கள் மற்றும் கை கடிகாரங்கள், இசைக்கருவிகள், பொம்மைகள், விளையாட்டு பொருட்கள், தளபாடங்கள், மெத்தை, பிளாஸ்டிக் பொருட்கள், மின் இயந்திரங்கள், மின்னணு உபகரணங்கள், ரசாயனங்கள், இரும்பு மற்றும் எஃகு பொருட்கள், உரம், கனிம எரிபொருள் மற்றும் உலோகங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

2019-20 ஏப்ரல்-பிப்ரவரி மாதங்களில் சுமார் 47 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த சீனாவுடனான வர்த்தக பற்றாக்குறையை விரிவாக்குவது குறித்து இந்தியா மீண்டும் மீண்டும் கவலைகளை எழுப்பியுள்ளது.

உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் மேக்-இன்-இந்தியா திட்டத்தை ஊக்குவிப்பதற்கும் அரசாங்கம் செயல்பட்டு வருவதால் கடமையை உயர்த்துவதற்கான நடவடிக்கையும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com