கிராம சபை கூட்டத்தில் மக்களை தேடி கல்வி திட்டத்துக்கு ஆதரவு திரட்டிய அரசு பள்ளி ஆசிரியர்கள்

கொரோனா தாக்கத்தின் காரணமாக கடந்த ஒரு ஆண்டாக கிராமசபை கூட்டங்கள் நடைபெறாமல் தவிர்க்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் காந்தி ஜெயந்தியையொட்டி தமிழகம் முழுவதும் கிராமசபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அறிவித்திருந்தது.
Published on

இந்த நிலையில் பூந்தமல்லி ஒன்றியத்திற்குட்பட்ட பாரிவாக்கம் ஊராட்சியில், ஊராட்சி மன்றத்தலைவர் தணிகாசலம் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது பகுதிகளில் உள்ள நிறை, குறைகளை கிராமசபை கூட்டத்தில் எடுத்துரைத்தனர். மேலும் கொரோனாவால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை போன்று மக்களை தேடி கல்வி என்ற திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதையடுத்து பாரிவாக்கத்தில் உள்ள அரசு பள்ளியை உயர்நிலை பள்ளியாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மாணவர்கள் யாரும் இடைநிற்றல் இருக்க கூடாது. பெற்றோர், மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் மக்களை தேடி கல்வி திட்டத்திற்கு ஆசிரியர்கள், மாணவர்களின் வீடுகளுக்கு வரும் போது 5, 10 மாணவர்களை ஒன்றாக அமரவைத்து கல்வி கற்று கொடுக்க பெற்றோர்களிடம் கொடுத்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கிராமசபை கூட்டத்தில் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆதரவு திரட்டினார்கள். இதனை அந்த பகுதி மக்கள் வரவேற்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com