குர்கான்
அரியானாவில், தூங்கிக்கொண்டிருந்த மனைவியை சுமார் 40 முறை வயிற்றில் குத்தி கொடூரமாக கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியானா மாநிலத்திலுள்ள குருகிராமை சேர்ந்தவர் பங்கஜ். இவரது மனைவி வன்ஷிகா சர்மா. இவர்களுக்கு 2017-ம் ஆண்டு ஏப்ரல் 27 ந்தேதி திருமணம் நடைபெற்று உள்ளது. திருமணம் நடந்ததில் இருந்து இருவருக்கும் இடையே தொடர்ந்து குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. அடிக்கடி கணவரை வன்ஷிகா அவமதித்து வந்து உள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கணவர் பங்கஜ், கடந்த இரண்டு மாதங்களாகத் திட்டம் போட்டு தனது உதவியாளர் நசீம் அகமதுவுடன் இணைந்து வன்ஷிகாவை கொடூரமாக கொலை செய்துள்ளார்.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூங்கிக்கொண்டிருந்த வன்ஷிகாவை கார் ஸ்பானரைக் கொண்டு தலையில் பலமாகத் தாக்கியும், ஆத்திரம் தீர வயிறு மற்றும் உடலின் பிறபாகங்களில் சுமார் 40 முறை கொடூரமாக குத்தியும் இந்தக் கொலையைச் செய்துள்ளார்.
வன்ஷிகாவின் தந்தை புகார் செய்ததை அடுத்து பங்கஜையும் அவரது உதவியாளரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.