ஓடும் ரெயிலில் குட்கா, புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்

ஓடும் ரெயிலில் குட்கா, புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்
Published on

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் அனைத்து ரெயில்களிலும் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்னகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முரளிமனோரன் மற்றும் போலீசார் தீவிர சோதனைச் செய்து வருகின்றனர்.

இன்று அதிகாலை கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரில் இருந்து திருப்பதி வரை செல்லும் திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் 5-வது நடைமடையில் வந்து நின்றது.

அந்த ரெயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியின் ஒரு இருக்கையில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் சோதனைச் செய்தபோது, அதில் 17 கிலோ குட்கா, புகயிலைப் பாக்கெட்டுகள் இருந்தது தெரிந்தது.

அதை, ரயில்வ போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com