பிலிப்பைன்ஸ்,
பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே , தான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். அடுத்த ஆண்டு தேர்தலில் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் திட்டத்தையும் கைவிடுவதாக அறிவித்தார்.
இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய அவர், பெரும்பாலான மக்கள் பொது மன்றங்களில் எனக்கு எதிராக தங்களின் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். நான் பதவியில் இருப்பதை பிலிப்பைன்ஸ் மக்கள் விரும்பவில்லை. மக்களின் விருப்பத்திற்கு கீழ்ப்படிந்து நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கிறேன் என்றார்.
76 வயதான ரோட்ரிகோ டுடெர்டே, போதைப்பொருள் எதிர்ப்பு அடக்குமுறை, கடுமையான பேச்சு மற்றும் வழக்கத்திற்கு மாறான அரசியல் பாணிக்கு பெயர் பெற்றவர் ஆவார். இவரின் அரசியல் நெறிமுறைகள் பிடிக்காமல் அங்குள்ள மக்கள் பலர் எதிர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது