காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கம் : இந்தியாவிற்கு ஐக்கிய அரபு எமிரெட்ஸ் ஆதரவு

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கம் செய்யப்படும் இந்தியாவின் நடவடிக்கைக்கு ஐக்கிய அரபு எமிரெட்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.
Published on

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நீக்கியுள்ளது.

இதற்கு ஐக்கிய அரபு எமிரெட்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கான ஐக்கிய அரபு எமிரெட்ஸ் நாட்டின் தூதர் அகமது பன்னா பேசுகையில், இந்திய அரசு காஷ்மீரில் மேற்கொள்ளும் மாற்றங்கள் சமூக நீதி மற்றும் பாதுகாப்பு மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தில் மக்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதோடு, பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையையும், அமைதியையும் ஊக்குவிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com