நகைச்சுவை வேடத்தில் நடிக்க தயங்கினேன்: நடிகை ரேகா

கடந்த வாரம் திரைக்கு வந்த ‘பேய் மாமா’ படத்தில் மொட்டை ராஜேந்திரனுக்கு ஜோடியாக நகைச்சுவை வேடத்தில், ரேகா நடித்து இருந்தார். இதை ரசிகர்கள் வரவேற்று பாராட்டுகிறார்களாம்.
நகைச்சுவை வேடத்தில் நடிக்க தயங்கினேன்: நடிகை ரேகா
Published on

அவர்களுக்கு ரேகா கொடுத்த பதில்:-

நான், கடலோரக்கவிதைகள் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானபோது எப்படி வரவேற்று பாராட்டினீர்களோ, உற்சாகப்படுத்தினீர்களோ, அதேபோல் திருமணத்துக்கு பிறகு குணச்சித்ர நடிகையாக நடிக்க வந்தபோதும் பாராட்டி அதே உற்சாகத்தை தந்தீர்கள். உங்களின் பாராட்டுகளுக்கு நன்றி. தியேட்டரில் சிரித்து மகிழ்ந்ததை பலர் பகிர்ந்து கொண்டார்கள். எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. முதலில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்தபோது, எனக்கு தயக்கமாக இருந்தது. இந்த படத்தில் நடிப்பதால் உனக்கு என்ன கவுரவ குறைச்சல் வந்துவிடப்போகிறது... எல்லா வகையான பாத்திரங்களிலும் நடிக்க வேண்டும். அதுதான் நடிப்பு. இப்படித்தான் நடிப்பேன் என்று ஒரு வட்டத்துக்குள் நம்மை அடைத்து விடக்கூடாது என்று என் உள் மனது சொன்னது. என் திரையுலக வாழ்க்கையில் என் மீது நான் வைத்த நம்பிக்கையை விட, மற்றவர்கள் என் மீது வைத்த நம்பிக்கைதான் என்னை ஒவ்வொரு கட்டத்திலும் மாற்றியிருக்கிறது. என்னால் நகைச்சுவை வேடங்களிலும் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை, ரசிகர்களின் வாழ்த்துகள் மூலம் கிடைத்து இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com