செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 419 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது.
Published on

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அம்பேத்கர் தெருவை சேர்ந்த 37 வயது ஆண், வீரமாமுனிவர் தெருவில் வசிக்கும் 48 வயது ஆண், பெருமாள்கோவில் தெருவை சேர்ந்த 48 வயது ஆண், கீழக்கரணை அக்ஷயா அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்த 44 வயது பெண் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

ஊரப்பாக்கம் மாமன்னர் அசோகர் தெருவை சேர்ந்த 29 வயது வாலிபர், பெருமாள்கோவில் தெருவை சேர்ந்த 67 வயது முதியவர், பெருமாட்டுநல்லூர் தங்கப்பாபுரம் காந்தி தெருவை சேர்ந்த 24 வயது இளைஞர், வண்டலூர் ஊராட்சி சிவசக்தி தெருவை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 419 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 308 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 8,224 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 2,866 பேர் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 218 ஆக உயர்ந்தது.

திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட கம்பர் தெரு, தேவி மீனாட்சி நகர், மகாத்மாகாந்தி தெரு, வி.எம்.நகர், கட்டபொம்மன் தெரு, அம்சா நகர், பத்தியால் பேட்டை ஆகிய பகுதிகளில் நேற்று ஒரே நாளில் 28 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அதேபோல கடம்பத்தூர் ஒன்றியத்தில் மணவாளநகர், கீழ்நல்லாத்தூர், பேரம்பாக்கம், போளிவாக்கம் போன்ற பகுதிகளில் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று ஒரே நாளில் திருவள்ளூர் மாவட்டத்தில் 378 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 5 பேர் பலியாகி உள்ளனர். மாவட்டத்தில் இதுவரையில் 11 ஆயிரத்து 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 6,691 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 4,124 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டம் முழுவதும் இதுவரையில் 193 பேர் பலியாகி உள்ளனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சி ஆத்தனஞ்சேரி பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 29 வயது வாலிபர்கள், 21 வயது இளம்பெண், 39 வயது ஆண் ஆகியோருக்கும், மணிமங்கலம் ஊராட்சியை சேர்ந்த 27 வயது பெண் மற்றும் படப்பை பெரிய தெருவைச் சேர்ந்த 30 வயது வாலிபர், 72 வயது முதியவர், கரசங்கால் பகுதியை சேர்ந்த 45 வயதுடைய ஆண், கீழ்ப்படப்பை பகுதியை சேர்ந்த 26 வயது ஆண் ஆகியோருக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 349 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாயினர்.இதுவரையில் 6 ஆயிரத்து 361 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 3,891 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

2,386 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 4 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரையில் 84 பேர் பலியாகி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com