சென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைவு

சென்னையில் பெட்ரோல் விலை 23 காசுகள் குறைந்துள்ளது, டீசல் விலை 21 காசுகள் குறைந்துள்ளது.
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைவு
Published on

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக்கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் விலை நேற்று ஒரு லிட்டர் ரூ.ரூ.74.51 ஆகவும், டீசல், விலையில் ஒரு லிட்டர் ரூ.67.86 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 23 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.74.28ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 21 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.67.65 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com