தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் சாலை விபத்துகளில் 167 பேர் உயிரிழப்பு 2018-ம் ஆண்டை விட21 சதவீதம் குறைந்தது

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் சாலை விபத்துகளில் 167 பேர் உயிரிழந்து உள்ளனர். கடந்த 2018-ம் ஆண்டை ஒப்பிடும்போது விபத்து உயிரிழப்பு 21 சதவீதம் குறைந்து உள்ளது.
Published on

தர்மபுரி,

பெண்கள் மற்றும் முதியோர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட காவலன் செல்போன் செயலியை தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை 10,000 பேர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகிறார்கள். சாலை பாதுகாப்பு குறித்து ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு காரணமாக சாதாரண விபத்து வழக்குகள் 2019-ம் ஆண்டில் 1,083 ஆக குறைந்தது.

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 2018-ம் ஆண்டில் மொத்தம் 195 சாலை விபத்துகள் நடந்தன. அதில் 204 பேர் உயிரிழந்தனர். 2019-ம் ஆண்டில் 153 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 167 பேர் உயிரிழந்து உள்ளனர். 2018-ம் ஆண்டை ஒப்பிடும்போது 2019-ம் ஆண்டில் விபத்து உயிரிழப்பு 21 சதவீதம் குறைந்து உள்ளது.

கண்காணிப்பு கேமராக்கள்

2019-ம் ஆண்டில் மாவட்டம் முழுவதும் திருட்டு தொடர்பாக 160 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் 133 வழக்குகளில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. திருட்டு, வழிப்பறி தொடர்பாக குற்றங்கள் கணிசமான அளவில் குறைந்து உள்ளன. மாவட்டத்தின் பல முக்கிய பகுதிகளில் இதுவரை 1,067 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, குற்றங்களை கண்காணித்து குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.2019-ம் ஆண்டில் மாவட்டத்தில் மொத்தம் 12 கொலை வழக்கு, 1 பாலியல் பலாத்கார வழக்கு ஆகியவற்றில் குற்றம் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு கோர்ட்டு தீர்ப்பின்படி தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 18 பேரும், தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com