தர்மபுரியில் இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

தர்மபுரியில் இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தர்மபுரியில் இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
Published on


தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட சமூக நல்லிணக்க மேடை சார்பில் இலங்கையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் கலந்து கொண்டு பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி பேசினார். இதை தொடர்ந்து சமூக நல்லிணக்க மேடையை சேர்ந்த ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் சிசுபாலன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் குமார், செயற்குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, மல்லையன், ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் கிரேசா மேரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் நந்தன், முன்னாள் மாவட்ட செயலாளர் ராமன், மாவட்ட துணை செயலாளர் சக்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com