திண்டுக்கல்லில், சாக்கடை கால்வாயில் எலும்புக்கூடு

திண்டுக்கல்லில் சாக்கடை கால்வாயில் இருந்து எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. கொலையா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல் குள்ளனம்பட்டியில் நத்தம் சாலையின் ஓரத்தில் பிரதான சாக்கடை கால்வாய் செல்கிறது. அந்த பகுதியில் உள்ள வீடுகள், கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அந்த கால்வாயில் சேருகிறது. இந்த கால்வாயின் மேல் ஓரிடத்தில் வாகனங்கள் செல்வதற்கு வசதியாக, இரும்பு கம்பியால் மூடி போன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை துப்புரவு பணியாளர்கள் அந்த பகுதியில் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது சாக்கடை கால்வாய்க் குள் மனித எலும்புக் கூடு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். பின்னர் சாக்கடை கால்வாய்க் குள் கிடந்த எலும்புக்கூடு வெளியே எடுக்கப்பட்டது. அப்போது எலும்புக் கூடாக கிடந்தது ஆண் என்பது தெரியவந்தது.

மேலும் இறந்தவர் வேட்டியும், கருப்பு சட்டையும் அணிந்து இருந்துள்ளார். இறந்து பல நாட்கள் இருக்கும் என்பதால், எலும்புக்கூடு மட்டுமே இருந்தது. சாக்கடை கால்வாய் மீது இரும்பு கம்பிகளால் மூடி அமைக்கப்பட்டுள்ளதால் அவர் தவறி விழுவதற்கு வாய்ப்பு இல்லை. எனவே, கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரில் உடல் இழுத்து வரப்பட்டு இருக்கலாம். அதில் அழுகி இருந்ததால், அரித்து செல்லப்பட்டு எலும்பு கூடாக மாறி இருக்கலாம் என்று தெரிகிறது. அதேநேரம் எலும்புக்கூடாக கிடந்தவர் தற்கொலை செய்தாரா? அல்லது அவரை யாரேனும் கொலை செய்தார்களா? என்பது தெரியவில்லை. இதுகுறித்து திண்டுக் கல் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com